Monday, November 30, 2009

மாபெரும் சந்தேகம்....

Monday, November 30, 2009எனக்கொரு மாபெரும் சந்தேகம் வந்திருக்கு.... தீர்த்தவுகளுக்கு எந்திரன் படம் எடுத்த வரை உள்ள டி.வி.டி அனுப்பப்படும்...தீர்க்க முடியாதவர்களுக்கு விஜய் நடித்த வில்லு டி.வி.டி அனுப்பப்படும்...

வகுத்துக்கு வஞ்சனை இல்லாம ரெண்டு அன் லிமிடெட் மீல்ஸ் ச உள்ள தள்ளி விட்டுட்டு அந்த மயக்கம் வர்ர மதியான நேரத்துல... ஒரு மின்னஞ்சல் வந்தது டீம் மேட்கிட்ட இருந்து.. வடக்க சூலம்ங்கறது தேதி படத்துல போட்டு இருந்ததது சரிதான்.... அது என்னன்னா.. அந்த பொண்ணு பிரசவ விடுப்புல ஊருக்கு போகுதுன்னு... சரி இதுல என்ன பிரச்சனை அப்படின்னு நினைக்க கூடாது... இங்கதான் பிரச்சினையே...

சரி நம்ம மேலயும் மானா வாரியா மரியாதை வச்சு அதுவும் தனியா மெயில் அனுப்பி இருக்கு... கட்டாயம் வாழ்த்து சொல்லி மெயில் அனுப்பலாம்னா எப்படி வாழ்த்து சொல்றதுன்னே தெரியல.... திருப்பி போட்ட கரப்பான் பூச்சி மாதிரி அப்படியே துடிச்சு போயிட்டேன்... சரி யாரவது பீட்டர் ல பிருச்சு மேயிறவங்கள்கிட்ட கேட்கலாம்னு நினைக்கும் பொது.. கும்புட போன தெய்வம் குறுக்க வந்தது மாதிரி நம்ப கூட்டாளி ஒர்த்தர் (worth + அர் ) வந்தாரு.. மொக்க போடத்தான்... அவருகிட்ட கேட்டேன்... அவரு என்னமோ ஏழு எட்டு ரோடு ரோலர ஒன்ன முழுங்குன மாதிரி பேந்த பேந்த முழிச்சாரு...
சரி வேலைக்கு ஆகாதுன்னு.... ரெண்டு பேரும் தலை கீழ யோசிச்சு பாத்தோம்.... ஒன்னும் வேலைக்கு ஆகல... சரி அதான் எல்லாத்துக்குமே பொத்தம் பொதுவா சொல்லற ஆல் தி பெஸ்ட் சொல்லலாம்னு யோசிச்சோம்... ஆனா அது ரெம்ப பொதுவானதா இருக்கவும்... சரி have a safe delivery சொல்லலாம் ன்னு முடிவெடுத்தோம்.. அப்பறம் அதையும் பல இடங்கள்ள வெட்டி ஒட்டி கடைசியா pray GOD to have a safe delivery அப்படின்னு ஒருமனதா தீர்மானம் பண்ணி, அந்த பொண்ணு இத படிக்கும் போது எதுவும் தப்பா புரிஞ்சுக்க கூடாதுன்னு கொலசாமிய கோடி தடவ கும்பிட்டுட்டு கண்ணா மூடிக்கிட்டு சென்ட் கிளிக்கினேன்....

வேற எப்படி வாழ்த்து சொல்லலாமுன்னு சொல்லி சந்தேகத்த தீர்த்து வைங்க...

Saturday, November 28, 2009

ஓடு ஓடு அது வந்துருச்சு.....

Saturday, November 28, 2009
ஏன்டா டவுசரு...... ஏன்டா ஆம்பள பொம்பள அத்தன பெரும் இப்படி தலை தெறிக்க ஓடுறாய்ங்க...
எவனோ அள்ளி விட்டான்னு ஒருத்தன் பதிவு எழுத இருக்கானாம்... அதான் உயிர் மேல ஆசை இருக்கவய்ங்க எல்லாம் ஓடுறாய்ங்க...
விடுறா...விடுறா... காச்ச மரம் தானே கல்லடி படும்...
இதெல்லாம் ஓவரா தெரியலையா உனக்கே....
சரி விடு.... என்னதான் எழுதிரான்னு பாப்போம்....
என்னத்த ஆப்போம்... ஆவூன்னா எல்லாரும்.... சரி விடு...
கொக்க மொக்க முடிஞ்சா உயிர் வாழுங்க...

சரி வந்ததுக்கு ஒரு மொக்கை...
நம்ம கூட்டாளி ஒரு ஆளு அவரோட சிட்டுக்குருவி ல அதான்ப எதோ டிவிட்டரா மே அதுல ஆறாவது அறிவு தொழில்நுட்பம் அப்படின்னு ஒரு தொடர்பு கொடுத்திருந்தான்...
சரி இத்துப்போன துணிக்கு ஒட்டு தானே போட்டுக்கிட்டு இருக்கோம், அதுல என்ன தான் இருக்குன்னு பாத்தேன்... எதோ மாயஜால படுத்துல வர மாதிரி ஏதோதோ செஞ்சாரு பிரணவ் அப்படிங்கறவரு... பாத்தா கையில கம்ப்யூட்டர் வருது... விரல்ல வித்தை காமிக்கிறாரு, நமக்கும் இந்த தொழில்நுட்பத்துக்கும் ஒரு 1500 கி மீ தூரம், அதுனால நீங்களே போய் பாருங்க...
கிளிக்.
 
Design by Pocket Distributed by Deluxe Templates