இப்படித்தான் ஒர்த்தனுக்கு கல்யாணம் ஆச்சாம்.. புது பொண்ணுக்கு உப்புமாவ தவிர எதுவும் சமைக்க தெரியாதாம். ரெம்ப ஆசையா காலைல சாப்பிட உக்காந்தாராம் நம்ம புது மாப்பிள்ளை..பாத்தா உப்புமாவாம்.. நம்மாளுக்கு உப்புமானா ஜென்ம விரோதி.. என்ன செய்ய ஏதாவது சொன்னா பொண்டாட்டி கொவிச்சுக்குமுன்னு குருட்டு கோழி தவிட்ட முழுங்குற மாதிரி கஷ்டப்பட்டு சாப்பிட்டுட்டு. நல்லாருக்குன்னு சொல்லிட்டு வேலைக்கு கிளம்பிட்டாராம்.. அப்பறம் மத்தியானம் சாப்பிட வந்திருக்காரு அப்பாவும் உப்புமாதானாம். மனுஷன் அப்படியே டெரர் ஆனாலும் அதை வெளில காட்டிக்காம, சாப்பிடும் போதுதான் தெரிய வந்துச்சாம் பொண்டாடிக்கு உப்புமாவ தவிர எதுவும் சமைக்க தெரியாதுன்னு... சரி ராத்திரிக்கும் சமைக்க விட்டா கதை கந்தலாயிரும்முன்னு... ராத்திரிக்கு ஹோட்டல் ல பொய் சாப்பிடலாமுன்னு, ரெண்டு பெரும் கொஞ்சம் பெரிய ஹோட்டலுக்கு போயிருக்காங்க.. உக்காந்த உடனே சர்வர் மெனு கார்ட் தந்திருக்கார்..நம்மாளுக்கு பீட்டர் தெரியாது... இருந்தாலும் பொண்டாட்டிக்கு முன்னால அத காட்டிக்காம, ஒன்ன டிக் பண்ணி கொண்டு வர சொன்னாராம்.. கொஞ்சம் நேரம் கழிச்சு ரெண்டு உப்புமா வந்துச்சாம்...நம்ம ஆளு மெல்லவும் முடியாம துப்பவும் முடியாம ரெம்ப கஷ்டப்பட்டு சாபிட்டுக்கிதே பக்கத்து சப்பிடரவங்கள பாத்தாராம்.. அதுல ஒருத்தன் ஜாங்கிரி சாப்பிட்டுகிட்டு இருந்தானாம்... நம்மளுக்கு ஜாங்கிரி சாப்பிட ஆசை... சரி என்ன பேரு சொல்லி சர்வர் கிட்ட அதை ஆர்டர் பண்றான் அப்படின்னு தெரிஞ்சுக்க அவனையே பாத்துகிட்டு இருந்தானாம், அந்தாளு சர்வர் கிட்ட "ஒன் மோர்" அப்டிங்கவும்... சரி அது பேரு "ஒன் மோர்" ன்னு நினைச்சுகிட்டு செர்வர்கிட்ட நம்மாளு "ஒன் மோர்" சொல்லிட்டு ஜான்கிரிக்காக ரெம்ப ஆவல வெயிட் பண்ணிக்கிட்டு இருக்கும்போது மறுபடியும் உப்புமாவா கொண்டாந்து வச்சாங்களாம்.
இந்த கதை மாதிரி தான் பெங்களூர் வந்த புதுசுல நம்ம பங்காளி(அவருக்கும் உப்புமா புடிக்காது) ஒருத்தருக்கு ஆச்சு நம்ம "சக்கரை சாம்பார்" (அது எப்படிடா சாம்பார் ல சக்கரை போட்டு சாபிடுரிங்க...அட கொக்கா மக்கா ) புகழ் சாகர் ஹோட்டல் ல ... பெங்களூர் வந்திருக்கோம் புதுசா ட்ரை பண்ணுவோம்னு ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்னா ட்ரை பண்ணி இருக்காரு..



அதுனால மக்கா பாத்து சூதானமா இருங்க... இல்லேன்னா உங்களுக்கும் கொட்டாச்சி தான்...
5 வெளைஞ்சது:
சூப்பர்..
நல்லாயிருக்குது...
இந்த வருசமாவது ரொம்ப அள்ளிவிடனுமுனு
காரமடை ஜோசியக்காரர வேண்டிக்கிறேன்..
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி பட்டாபட்டி... அள்ளிவிட முயற்சி செய்கிறேன்..
haha very nice
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி angel.
Post a Comment