Thursday, December 31, 2009

குட்டி - ஓர் அ(ல)சல் பார்வை....

Thursday, December 31, 2009
பொதுவாக குட்டி என்னும் சொல்லானது தனியாக உபயோகப்படுத்தும்பொழுது இரண்டு விதமாக பொருள் தரும்.
ஒன்று : சிறிய அல்லது சின்ன என்று பொருள் தரும். இரண்டாவதாக (குறிப்பாக) அழகும் வனப்பும் உள்ள பெண்களை பெண்களுக்கு தெரியாமல் (தெரிஞ்சா செருப்படி கிடைக்கும்) குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களை குறிப்பிட பயன்படுகிறது. மேலும் வயதும் வாலிபமும் உள்ள இளைஞர் கூட்டம் பெண்களை சைட் அடிக்கும் பொது இந்த சொல்லை உபயோகப்படுத்துவார்கள், உதாரணமாக "மச்சி, குட்டி சும்மா கும்முன்னு இருக்குல்ல" என்றும் "குட்டி நச்" என்றும் குறிப்பிடபடுவதுண்டு. ஆனால் பட்டணங்களில் இருக்கும் பெரியோர்கள் இவ்வாறு சொல்வது நாகரிகம் இல்லை என்று கருதியோ இல்லை வேறு சில காரணம் கருதியோ அவ்வாறு பெண்களை வெளிப்படையாக கூறுவதில்லை...ஆனால் கிராமத்தில் இச்சொல்லானது எல்லோராலும் பயன்படுத்தபடுகிறது.... இதை பற்றி இளைஞர் களிடம் கேட்ட பொது... அவர்கள்.. குட்டி என்ற சொல்லானது பெரியோர்கள் மற்றும் பெரியோர்கள் போர்வையில் நடிப்பவர்களால் வேண்டும் என்றே ஒதுக்கபடுவதாகவும் அதானல் வளரும் தலைமுறையினர் இந்த சொல்லை அடுத்த, வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்ல வேண்டியே உபயோகப்படுத்துவதாக கூறுகின்றனர். மற்றபடி பெண்களை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் கிடையாது என்றும் ஆணித்தரமாக அடித்து கூறுகின்றனர்.

மேலும் குட்டி என்ற சொல்லை மற்ற சொற்களோடு உபயோகப்படுத்தும் பொது பல சமயங்களில் பல பொருளை தருகிறது..
அதாவது உயர்வாகம் சில இழிவாக கூறவும் பயன்படுகிறது... அதோடு நில்லாமல் குட்டி என்ற இந்த சொல்லானது "பால" பருவத்தை குறிக்கவும் பயன்படிகிறது... புலியின் குட்டியை புலிக்குட்டி என்றும் பூனையின் குட்டியை பூனைக்குட்டி என்றும் யானையின் குட்டியை யானைக்குட்டி என்றும் பண்டைய தமிழர்களால் முன்மொழியப்பட்டு இன்றும் அவ்வாறே வழிமொளியப்படுகிறது... என்றாலும் கன்றுகுட்டி என்பது கன்றின் குட்டி என்று பொருள் படாமல் பசுவின் கன்று என்று பொருள் படுகிறது... இது குட்டி என்ற சொல்லின் overloading என்றே கருத வேண்டும்..
இழிவாக ஒருவரை திட்ட வேண்டும் என்றாலும் இந்த குட்டி என்ற சொல் மக்களுக்கு பெரும் உதவி புரிகிறது... குறிப்பாக "குட்டி சுவராத்தாண்ட போவ" என்பதில் குட்டி என்பது சுவருக்கு முன்னால் வருகிறது... பல சமயங்களில் நாம் இந்த வார்த்தையில் வரும் குட்டியை கவனிக்க மறந்து இருப்போம் அதற்க்கு காரணம் குட்டி யானது சுவருக்கு முன்னே வருவதால் சுவர் நம் கண்களில் இருந்து குட்டி யை மறைத்து குட்டிக்கு பெரும் கேடு விளைவிக்கிறது... அதனாலேயே குட்டி யானது சுவருக்கு கேட்ட பெயரை தருகிறது. மேலும் இது "குட்டி சாத்தான்" என்றும் "குட்டி பிசாசு" என்றும் பிறரை திட்ட பயன்படுகிறது...

நாம் இலக்கியத்தை உற்று நோக்கினால் புலவர்களின் பேரில் கூட குட்டி என்பது இருந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல துல்லியமாக தெரிகிறது... எடுத்துக்காட்டாக முத்துக்"குட்டி" புலவர். மேலும் இந்த சொல்லை "பழமொழி" யிலும் கூறி இருக்கிறார்கள்.. இது " கழுதை கெட்டா குட்டி சுவர் ' என்பதிலிருந்து விளங்கும்... பழன்காலத்தொடு நின்று விடாமல் சமகால கவிஞர்கள் இல்லை அது போல கருதப்படுபவர்களாலும் குட்டி என்ற சொல்லை நிராகரிக்க முடியவில்லை என்பதை பல திரைப்படங்களில் இருந்து நாம் கண்டு கொள்ளலாம்.....

இவ்வாறு தனிசிறப்போடு விளங்கும் இந்த குட்டியை ஆங்கில மொழி (அக்கொயர்) தனதாகிகொள்ள பெரும் முயற்சி நடப்பது இந்த வாக்கியத்திலிருந்து உறுதியாகிறது... பொதுவாக அவர்கள் "நல்ல தேநீரை" குட் டி என்று கூறுவார்கள். பின்பு அதையே குட்டி என்றும் உபயோகப்படுத்த வாய்ப்பு உள்ளதால் குட்டியின் தனித்தன்மையை காக்க சட்ட சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை..

ஆகவே குட்டியை வாழ வைப்போம்.... வாழ்க குட்டி...

Tuesday, December 29, 2009

காரணம் ஆயிரம்...

Tuesday, December 29, 2009
(எச்சரிக்கை : இக்கதையில் அனைத்தும் கற்பனையே.கதை கரு நண்பனுடையது...)

சத்தியமா இன்னைக்கு கிருஷ்ணன் அந்த கம்பெனி இன்டர்வியூ விற்கு போவான் என்பது அவனுக்கே தெரியாது... காலம் யார வேணுமுன்னாலும் எப்படி வேணுமுன்னாலும் மாத்தும்.

அவசரம் அவசரமா காலயில, 8:30 மணிக்கு ITPL இன்டர்வியூ போறதுக்கு கிளம்பி சில்க் போர்டுக்கு வேர்க்க விருவிருக்க வர்றதே ஒரு வாழ்வா சாவா போராட்டம் தான். அப்பதிக்கு அத்தி பூத்தாற்போல், வேகமா வந்த 500K வோல்வோ பஸ்ல மெதுவா ஏர்ற பொண்ணுங்கள பரிதாபத்தோட பாத்தபடியே ஏறி ஒரு ஓரமா போய் உக்காந்தேன். கப்பல் மாதிரி அலுங்காம குலுங்காம முன்னோக்கி போற அந்த பஸ்ல இருந்த என்னோட நினைவு மட்டும் பின்னோக்கி போனுச்சு.. இத நினைச்ச உடனே..... இன்டர்வியூ ல கேப்பாய்ங்களே எதுக்கா 6 வருசமா இருந்த உங்க பழைய கம்பெனில இருந்து வாரிங்கன்னு.....

அப்படி மட்டும் நடக்காம இருந்திருந்தா....இந்த இன்டர்வியூ வே அட்டென்ட் பண்ணி இருந்துஇருக்க மாட்டேன்.

போன வருஷம் ஒரு சந்தோசமான சனிகிழமை.. ஆபீஸ் வர சொல்லிட்டாய்ங்கலேன்னு வருத்தத்துல... காலேஜ் நண்பன் 'பங்காளி கிட்டு' வோட ஜிமெயில் சாட் பண்ணிக்கிட்டு இருக்கும் பொது...சிவ பூஜைல கரடி புகுந்த மாதிரி...

என்னோட டெஸ்க்குக்கு HR வந்து... யுவர் இன்டர்வியூ கேண்டிடேட் இஸ் வெயிட்டிங் அட் தி மீட்டிங் ரூம்3. ப்ளீஸ் கோ அண்ட் டேக் தி இன்டர்வியூ. திஸ் இஸ் தி ரெசுமே ஆப தி கேண்டிடேட்.

HR கிட்ட இருந்து அத வாங்கிட்டு போற வழில நுனிப்புல் மேயுற ஆடு மாதிரி கேண்டிடேட் ஓட டீடைல்ஸ் எ ரெசுமே ல பாத்தேன்... ஆச்சரியம் ஆனால் உண்மை.. நான் எடுக்க வேண்டிய கேண்டிடேட் ஒரு பொண்ணு... இது வரைக்கும் நான் பொண்ணுங்கள இன்டர்வியூ எடுத்தே இல்லை.. என்ன பண்றது..மனசுக்குள்ள தைரியத்தை வரவளைச்சுகிட்டு மீட்டிங் ரூம்3 க்கு போனேன்.. R&D ப்ராஜெக்ட் டுக்காக எடுக்க வேண்டிய அந்த பொண்ணு பயத்துல.. ஆடு திருடுன நரி மாதிரி பேந்த பேந்த முழிச்சிகிட்டு இருக்கும் போதுதான் எக்ஸ்க்யூஸ் மீ சொல்லிட்டு நான் உள்ள போனேன். இந்த காலத்துலயும் மரியாதை தெரிஞ்ச பொண்ண இருக்கும் போல.. நான் போன உடனே எழுந்திரிச்சு நின்னது..

ஆனா அந்த பொண்ணோட கண்ணுல எதோ ஒரு விரக்தி தெரிஞ்சது..

"ஹாய் மாலினி. அய் ஆம் கிருஷ்ணன்." (மனசுக்குள்ள யாரும் இவ்வோல அழகை இவ்வலோ கிட்ட பாத்திருக்க மாட்டாங்க. அட உண்மையிலே நல்ல அழகுங்க.)

"ஹாய்."

"உங்க ரெசுமே பார்த்து தெரிஞ்சுகிட்டேன் நீங்கலும் தமிழ்நாடு தான்னு. நான் மதுரை பக்கம் நீங்க?"

"நான் கோயம்புத்தூர்.காலேஜ் படிச்சது சென்னைல அண்ணா யுநிவர்சிட்டில".

"குட்".((மனசுக்குள்ள) பாத்தாவே தெரியுது பெரிய படிப்சுன்னு..)

"உங்களுக்கே தெரியும்.. நாங்க ஒரு லீடிங் டெலிகாம் R&D அண்ட் பராடக்ட் கம்பெனி.

அதுனால இன்டர்வியூ எல்லாம் உங்க ப்ரசென்ஸ் ஆப மைண்ட டெஸ்ட் பண்ணறதா இருக்கும்.. நீங்க 3+ இயர்ஸ் டெலிகாம்ல டொமைன்ல வொர்க் பண்ணி இருக்கிறதுனால டெக்னிகல் ரவுண்டு அப்பறம் கொஞ்சம் டொமைன் ரவுண்டு அப்பறம் ப்ரசென்ஸ் ஆப மைண்ட டெஸ்ட். ஆர் யு ஓகே?"

(மனசுக்குள்ள.. உரலுகுள்ள தலைய விட்டுட்டு உழக்கைக்கு பயந்தா எப்படி...)

"ஓகே சார்".

"கால் மீ கிருஷ்ணன். நோ பர்மாளிடிஸ் ப்ளீஸ்."

"ம்".

டெக்னிகலா ஒரளவு நல்லா பதில் சொன்னது.சரி டொமைன்ல ஒரே ஒரு கேள்வி. "சிம் கார்ட் இல்லாம மொபைல்ல இருந்து எந்த கால் ஆவது பண்ண முடியுமா?". கேட்டுட்டு அந்த பொண்ண பார்த்தேன்..

" "

பதில் இல்லை.. ஆன மதுரைய பார்வையாலே எரிச்ச கண்ணகி மாதிரியே போஸ் கொடுத்துச்சு.. நம்மதான் சிங்கமாச்சே.. பயத்த வெளிக்காட்டிக்காம.. பக்கத்திலிருந்த தண்ணிய குடிச்சுட்டு.. சரி பரவா இல்லை.. இப்ப ப்ரசென்ஸ் ஆப மைண்ட test.

நல்ல கவனமா கேள்விய கேளுங்க..

ஒரு சின்ன ரயில்வே ஸ்டேஷன். ரெண்டு ட்ராக் இருக்கு.

ஒன்னு வந்து, நார்மல் ட்ராக். எல்லா ரயில் வண்டியும் அதுல தான் போகும்.

ரெண்டாவது ட்ராக் ரெம்ப பழைய ட்ராக்.. ரெம்ப பழசனதால அத இப்ப யூஸ் பண்றது இல்ல. அந்த ஸ்டேஷனுக்கு ஒரு ரயில் வருது.. அந்த நேரம் பார்த்து நார்மல் ட்ராக் ல, ஒரு 15 பேர் உள்ள வேன் பிரேக் டவுன் ஆகி தண்டவாளத்துல நிக்குது..

அந்த சமீப காலமா யாரும் யூஸ் பண்ணாத ட்ராக் ல ரெண்டு மூணு சின்ன பசங்க ரயில் வராதுன்ன்னு தைரியதுல விளையாடிகிட்டு இருக்காங்க.. ஸ்டேசன் ல உள்ள ட்ராக் சேஞ்ச் பண்றவரு இப்ப ரயில எந்த ட்ராக் ல விடலாமுன்னு முடிவு எடுக்கணும்.. அவருக்கு ரெண்டு ஆப்சன் இருக்கு.. ஒன்னு நார்மல் ட்ராக் ல விடுறது..அப்படி விட்டா வேன் ல உள்ள எல்லோரும் காலி... ரெண்டாவது அந்த பழைய ட்ராக் ல விடுறது.. அப்படி அப்படி விட்டா ரயிலே வராதுன்னு நம்பி விளையாடிகிட்டு இருக்குற அந்த சின்ன பசங்க காலி... ஐப்ப எந்த முடிவு எடுத்தா நல்லதுன்னு நீங்க நினைகிறீங்க?ஏன்?

(கொஞ்சம் நேரம் அமைதி...)

"ட்ராக் சேஞ்ச் பண்றது தான் நல்லது... ஏன்னா 15 பேர காப்பாத்திடலாம்."

"ம். ஏன் நார்மல் ட்ராக் ல விட கூடாது.. எப்பவுமே யூஸ் பண்ணாத ட்ராக் அப்படிங்க்ரதாலா ட்ராக்கோடா கண்டிசன் எப்படி இருக்குமுன்னே தெரியாது.. அதனால ரயிலே கவுந்து விட சான்ஸ் இருக்கு.. ஒரு 15 பேருக்காக எது மொத ரயிலையே ரிஸ்க் ல தள்ளுனும்.."

"எஸ். நான் இத திங் பண்ணல."

"ஓகே.கூல். அடுத்த கேள்வி.. இது IAS ல கேட்ட கேள்வி... நல்ல நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க.. ஒரு நல்ல அருமையான தமான தென்றல் வீசக்கூடிய காலை பொழுது... படுக்கை ல இருந்து எழுந்து பாக்கும்போதான் தெரிய வார்த்து... நீங்க pregnant ஆ இருக்கிங்கன்னு...உடனே அடுத்து என்ன பண்ணுவிங்க... "

""

கண்ணாலே எனக்கு சாபம் விட்டுகிட்டே மயக்கம் ஆயிடுச்சு..

"மாலினி.. மாலினி.."

பக்கத்திலிருந்த தண்ணியை எடுத்து மூஞ்சில அருவில வர்ற சாரல் மாதிரி தெளிச்சேன்...

"மாலினி என்னாச்சு.. காலைல சாப்பிடலையா?.. எதாவது சாபிட்ரிங்களா?"

"இல்ல அதெல்லாம் ஒன்னும் வேண்டாம்.."

"இந்தாங்க தன்னியவாது குடிங்க..."

"டேக் ரெஸ்ட்"

5 நிமிசத்துக்கு அப்பறம்...

"ஓகே நம்ம இன்டர்வியு வ முடிசுய் கிருவோம்.. டேக் கேர்.. சி யு எகைன் "

நைட் ரூம்ல இந்த இன்டர்வியு வ பத்தி ரூம் மேட் ரவி கிட்ட சொன்னேன்...

"ஏன்டா கிருஷ்ணா... லூசாடா நீ... எதோ அந்த பொண்ணு நல்ல அப்பாவியா இருக்கிறதால உன்னைய திட்டமா அப்படியே விட்டுருச்சு..."

"நான் என்னடா பண்ணுனேன்.."

"இப்படியாடா கேள்வி கேப்பாங்க... அந்த பொண்ணு இவ்வோல பயந்தாகொள்ளியா இருந்த ஏன் இன்டர்வியு வுக்கு வரணும்... பேசாம வீடிலேய சமைச்சு போட்டுக்கிட்டு இருக்க வேண்டியதுதானே..."

"இப்பதான் ரெண்டு நூற்றாண்ட பொண்ணுங்க வெளில வர ஆரம்பிச்சி இருக்காங்க... அவங்கள என்கரேஜ் பண்றது விட்டுட்டு இப்படி எல்லாம் பேசாத மச்சி..."

"சரிங்க பாரதியார்... அப்ப அந்த பொண்ண செலக்ட் பண்ணிட்ட..."

"ம்"

அந்த பொன்னும் என்னோட பராஜக்ட் ல ஜாயின் பண்ணிடுச்சு...ரெண்டு மாசமா வேலை அதிகமாக இருந்ததால பேச முடியல... ரிலீஸ் எல்லாம் முடிஞ்சதுக்கப்பரம் டீம் ல எல்லோரும் ப்ரீ ஆனோம்.. ஒரு நாள் 7:30 கேப் ல போகலாமுன்னு போனேன்..ரெண்டு பேர் உக்கார்ற சீட்.. அதுல ஜன்னல் ஓரமா உட்காருவதர்க்கும் வண்டி எடுப்பதற்கும் சரியாய் இருந்துச்சு..அப்பத்தான் ஜன்னல் வழியா ஒரு மின்னல் எனக் காப் எ நோக்கி ஓடி வந்தது வந்தது.. அந்த மின்னல் மாலினி...டிரைவர் கிட்ட சொல்லி வண்டிய நிறுத்த சொன்னேன்.. வண்டில வேற சீட் காலி இல்லாததால் எனக்கு பக்கத்துல பயந்துகிட்டே வந்து உக்காந்தது.. கிணத்துக்குள்ள இருந்து தவளை கத்துற மாதிரி மெதுவா ஒரு தேங்க்ஸ் சொன்னுச்சு... வண்டிய நிருதுனதுக்காக... அப்பறம் லைட்டா ஒரு சைட் விட்டுட்டு அது பாட்டுக்க ipod ல பாட்டு கேக்க ஆரம்பிச்சுடுச்சு.. மாரதள்ளிகிட்ட வழக்கம் போல ரெம்ப டிராபிக்... ipod ல சார்ஜ் தீந்து போச்சு போல அத எடுத்து ஹான்ட் பாக் ல வச்சது..

"என்னங்க மாலினி முத்து எடுத்திட்டிங்களா?..."

"என்னது"

"இல்லை இசை அப்படிங்கற கடல்ல மூழ்கி இருந்திங்களே... அதான் கேட்டேன்...."

ஒரு சின்ன சிரிப்பு மட்டும் பதில்..

"எங்க தங்கி இருக்கிங்க?"

"மடிவாளா ல PG ல"

"ஓகே"

அடுத்த நாளும் ஒரே காப் ல சீட் ல பயணம்...அப்படியே மடிவாளா போற வரை பேசிகிட்டே போனோம்.. அப்பறம் டெய்லி ஒரே காப் ல தான் பயணம்.. ஆனால் அந்த பொண்ணு மட்டும் பிடி கொடுத்து பேசுற மாதிரி தெரியல...

ஒரே நாள் காப் ல போகும்போது...

"மாலினி.. நீங்க ரஜினி விசிரியா?"

"ஏன்?"

"சிங்கம் சிங்கிள் லா வர்ற மாதிரி நீங்களும் சிங்கிள்லாவே சாப்பிட போறீங்க.. காப் ல தனியா உட்காந்து போறீங்க.. ஏன் யாரும் பிரண்ட்ஸ் இல்லையா? "

"இல்ல யாரையும் தொந்தரவு பண்ண வேணாமுன்னா தான்.. அதோட இப்படியே இருந்து பழகிடுச்சு..."

"அதெல்லாம் யாரும் தொந்தரவா நினைக்க மாட்டாங்க.. நீங்க ஏன் அப்படி பீல் பண்றிங்க.. ப்ரீ யா எல்லார்கிட்டயும் பேசுங்க.. எல்லாரும் அப்பறம் உங்கள் கிட்ட ப்ரீ யா பேசுவாங்க.."

"ம்.."

"நம்மளுக்கு கிடைசிருக்கிறதே ஒரு லைப் தான்.. அத சந்தோசமா எல்லோரோடையும் சிரிச்சி பேசி இருக்கலாம்ல..."

"ம்.."

ஒருவாரம் கழித்து... வழக்கம் போல் ஒரு நாள் ஈவ்னிங் காப் ல..

"என்ன மாலினி பிரண்ட்ஸ் புடிசிட்டிங்களா.."

"இல்லங்க.."

"சரி இந்த வாரம் நாலு நாள் லீவு வருது ஊருக்கு போகலியா?"

"இல்ல. டிக்கெட் கிடைகல.."

இப்படி வழிய போய் பேசினதாள என்கிட்ட மட்டும் ஓரளவு தயங்காம பேச ஆரம்பிச்சுச்சு..கொஞ்சம் கொஞ்சமா மாலினிக்கு என்னோட பிரண்ட்ஸ் எல்லாரையும் அறிமுகபடுதுனேன்.. இச்சே இவ்வோல நாள் எல்லார்கிட்டயும் பேசாம வேஸ்ட் பண்ணிட்டேன்னு பேசிகிட்டு இருக்கும் பொது சொல்லி வருதபட்டுச்சு...

அடுத்தநாள் காலைல 11:00 மணிக்கு மாலினிக்கு கால் பண்ணி என டெஸ்க்குக்கு வர சொன்னேன்..

"இந்தாங்க டிக்கெட் இன்னைக்கு நைட் 11:00 மணிக்கு பொம்மனஹல்லி ல இருந்து KPN.. அப்பறம் இவங்க மீனா.. இவங்களும் கோயம்புத்தூர் தான்.. டெஸ்டிங் ப்ராஜெக்ட் ல வொர்க் பண்ணறாங்க.. உங்க PG ல தான் தங்கி இருக்காங்க..இவங்களுக்கு வொர்க் அதிகமா இருகிராதால ஊருக்கு போகல..அவங்களோட டிக்கெட் தான் இது..ம்ம்.... இனிமே சாப்பிட போகும்போது கூட இவங்க கூட போங்கோ... தனியா போகாதிங்க.."

"தேங்க்ஸ் கிருஷ்ணன்.. தேங்க்ஸ் மீனா.. எனக்கு ஒரு மீட்டிங் இருக்கு.. நான் அப்பறம் பேசுறேன்.."

அன்னைக்கு நைட் 10:15 மாலினி கிட்ட இருந்து கால்...

"சொல்லுங்க.. என்ன இந்த நேரத்துல.."

"தூங்கிட்டிங்களா ..."

"இல்ல.. சொல்லுங்க.."

"இல்ல... இந்த நேரத்துல தனியா ஆட்டோ ல பொம்மனஹள்ளி போக பயமா இருக்கு.. ப்ரீயா இருந்த டிராப் பன்ரிங்களா.. "

"ம்.. சரி ஐயப்பன் கோயில் கிட்ட வந்து கால் பண்றேன்.. வந்துருங்க.. "

சரின்னு பிரண்ட்டோட பைக் எடுத்திகிட்டு ஐயப்பன் கோயில் கிட்ட வந்து கால் பண்ணினேன்..வண்டில பொம்மனஹள்ளி போகும்போது...

"கிருஷ்ணன்... இன்டர்வியுல ஒரு கேள்வி கேட்டிங்கள்ள.. நான் கோடா மயக்கம் ஆயிட்டேன்ல... ஏன் அப்படி கேட்டிங்க.. "

"ஆமா எதுக்கு நீங்க கேள்விக்கு பதில் சொல்லாம மயக்கம் ஆனிங்க..."

" திடீர்ன்னு இந்த மாதிரி கேட்கவும் என்ன சொல்றதுனே தெரியல.. அதான்.."

"எந்த ஒரு விஷயத்தையும் நம்ம பாசிடிவ் அப்ரோச்ல பாக்கணும்.. அப்படிங்கறதுக்காக தான் அந்த கேள்வி.. நீங்க அதுக்கு கட்டாயம் பதில் சொல்லுவிங்கன்னு எதிர் பார்த்தேன்.."

"என்ன பதில் சொல்லுவேன்னு..."

" pregnant ஆனா விஷயம் தெரிஞ்ச உடனே எழுந்திரிச்சு போய் உங்க ஹஸ்பன்ட் கிட்ட சொல்லுவிங்கன்னு தான்... சோ எந்த விஷயத்தையும் எமோசனல் ஆகாம பாசிடிவ் ஆ தினக் பண்ணுங்க சரியா.."

"ம்ம் ட்ரை பண்றேன்.."

பஸ் வரவும் மாலினிய ஏத்திவிட்டுட்டு வந்தேன்....ஊருக்கு போயிட்டு வந்த அடுத்த வீக் எண்டு எனக்கு கால் பண்ணி...அவங்க அண்ணனுக்கு பர்த்டே க்கு ஷர்ட் எடுக்கணும்ன்னு என்னைய Forum உக்கு வர சொன்னுச்சு..

"உங்க அன்னனோட சைஸ் என்னது மாலினி .."

"உங்க சைஸ் இருக்கும்.... "

சைஸ் சொல்லவும் சரின்னு லைட் எல்லோ கலர் ல ஒரு ஷர்ட் எடுத்துகிட்டு வந்து பிடிச்சிருக்கான்னு கேட்டுச்சு..

"ம்... சூப்பர் ஆ இருக்கு.. நல்லா செலக்ட் பண்றீங்க.."

"அப்ப என் செலக்சண் கரெக்ட் அப்படின்கிரிங்க.."

"ம்.. இருக்கலாம்..."

டிரஸ் எடுத்துகிட்டு நடந்து வரும்போது மாலினிய அவங்க PG ல விட்டுடிட்டு நான் என ரூம் போனேன்..

அடுத்த நாள் காலைல ஆபீஸ் போனபோதுதான் எனக்கு பிறந்த நாள் அதுவமா அந்த அதிர்ச்சி காத்திருந்தது... என்னோட இடத்துல ஒரு பார்சல்.. இனிய பிறந்த நாள் வாழ்த்துகள் -- வித் லவ் ன்னு லேபில் ஓட.. யார இருக்கும்னு ஓபன் பண்ணி பார்த்தா.. மாலினி... நேத்து நாங்க எடுத்த ஷர்ட் இருந்தது.. எனக்கு என்ன பண்றதுன்னே தெரியல...

மீனாவுக்கு கால் பண்ணினேன்.. அப்பத்தான் தெரிய வந்தது...மாலினி என்னோட நட்ப வேற மாதிரி எடுதுகிருசுன்னு... சரி என்னோட முடிவ போன் ல சொல்லறத விட லெட்டர் எழுதலாமுன்னு லெட்டர் எழுதினேன்...

"ஹாய் மாலினி..

இத நான் சொல்லியே ஆகணும்... உங்கள முதல் முதல்ல இன்டர்வியு ஹால்ல பாக்கும் போது... உங்க கண்ணுல சந்தோசத்த சாகடிச்சிட்டு எதோ வாழ்க்கையே முடிஞ்சு போன மாதிரி விரக்தியா இருக்குறத பார்த்தேன்... வாழ்க்கையோட இன்பம் சந்தோசம் உங்களுக்கு தெரியலைன்னு எனக்கு தோணிச்சு.. அதான் இதே எல்லாம் உங்களுக்கு புரிய வைக்கனுமுன்னு தான் உங்களோட பேசினேன்.. பழகினேன்.. ஆனா அத நீங்க தப்ப எடுத்திகிட்டிங்க... நீங்க கேட்கலாம்..ஏன் எமேல மட்டும் இந்த அக்கறைன்னு... ஏன்னா என் காயதிரிக்காக... வாழ்க்கைன்னா என்ன.. சந்தோசம்ன்னா என்னன்னு எனக்கு சொல்லி தந்த என் மாமா பொண்ணு காயதிரிக்காக... அவளுக்கு கேன்சர்.. போனவருசம் நிலைமை ரெம்ப மோசமாகி ஆஸ்பத்திரில அட்மிட் ஆகி இருக்கும் போது.. இடி விழுந்த பண மரம் மாதிரி அலுதுகிட்ட இருந்த என்கிட்ட

"அழுகாதிங்க மாமா ப்ளீஸ்.. நான் எப்படியும் பிழைக்க மாட்டேன்.. எனக்காக ஒன்னு செய்விங்களா..."

"உனக்கு ஒன்னும் ஆகாது..சொல்லு காயத்திரி..என்ன வேணும்னாலும் செய்றேன்... "

"மாமா... நான் செத்து போயிட்டேன்னு நீங்க அழுதுகிட்டு கவலைய இருக்க கூடாது.. அப்பறம்... "

"ஐயோ ஏன் இப்படி எல்லாம் பேசுற.. என்னால தாங்க முடியல... நான் உன்கூட தான் எப்பவுமே இருப்பேன்.. சொல்லு என்ன பண்ணனும்.."

கொஞ்ச நேர அமைதிக்கு பின்

"மாமா.. வாழணுமுன்னு நினைக்கிற எனக்கு வாழ விதி கொடுத்து வைக்கல... ஆனா இங்க நிறைய பேரு வாழ்க்கைன்னா என்னனே தெரியாம இருக்காங்க... என் சாவு மூலமாவது அவங்களுக்கு எல்லாம் நீங்க வாழ்க்கைன்னா என்னனு தெரிய வைபிங்களா மாமா...எனக்காக... "

சொல்லிகிட்டு இருக்கும் போதே உயிர் பிரிந்தது...

"

இப்ப புரிஞ்சு இருக்குமுன்னு நினைக்கிறன்..மாலினி உங்களுக்கு... தயவு செய்து உங்க முடிவ மாத்திக்குங்க...

இப்படிக்கு ...

கிருஷ்ணன்.

"

லெட்டர மீனாகிட்ட கொடுத்து மாலினிகிட்ட கொடுக்க சொன்னேன்... ஆபீஸ் ல மாலினி என்னைய பாக்கும் போது எல்லாம் அன்கம்பர்டேபிள் ஆ இருக்கும்.எதுக்கு மாலினிய நான் ஆபீஸ் ல இருந்து டிஸ்டப் பண்ணனுமுன்னு நினைச்சு ரிசைன் பண்ணலாமுன்னு முடிவெடுத்தேன்...

அப்பத்தான் தெரிஞ்சது... வேலை மாறி போறதுக்கு காரணம் ஆயிரம்....

Wednesday, December 23, 2009

வேட்டைக்காரனுக்கு சாதகமான சில விஷயங்கள்....

Wednesday, December 23, 2009
ஊரு பக்கம் வேடிக்கையா சொலுவாய்ங்க..
காட்றவய்ங்க காத காட்டினா ஊசியில குத்துறதுக்கு பதிலா உலக்கயில குத்துவாய்ங்கலாம்... ஆனா வேட்டைக்காரன் உலக்கை மாதிரியும் தெரியல... உலக்கைய விட பெருசு...இப்படி எல்லாம் பின்னால நடக்குமுன்னு தெரிஞ்சு தானோ என்னவோ ஆண்டவன் படைக்கும் போதே ரெண்டு கதையும் ரெண்டு கண்ணையும் படைச்சிருக்காரு... நன்றி கடவுளே......
ஆனா ஒண்ணு... கட்டாயம் 100 நாள் ஓட்டிருவாய்ங்க (சிட்டி ல இல்லைனாலும் ஊரு பக்கம் கண்டிப்பா)... சொல்ல முடியாது தமிழ் நாடு அரசின் சிறந்த படத்துக்கான விருதும் கிடைக்கலாம்(கமல், ரஜினி படம் எதுவும் வல்லேன்னா..)

வேட்டைக்காரனுக்கு சாதகமான சில விஷயங்கள்....


1. சொல்லிக்கிற மாதிரி வேற எந்த தமிழ் படமும் வெளியாகல...
2. காதே கிழியிற மாதிரி விளம்பரம்...(பாதி பேரு இவய்ங்க விளம்பரத்துக்கு பயந்தே TV பாக்கமாட்டேன்கிறாய்ங்க )
3 எப்படியோ பாட்டு எல்லாம் ஹிட் ஆகிபோச்சு..அதுக்காகவே கொஞ்சம் பேர் பாப்பாய்ங்க
4 அப்பறம் நம்ம அனுஷ்கா
5 பண்டிகை காலம்.. கிறிஸ்துமஸ் க்கும் எதிர்பார்க்குற அளவுக்கு எந்த படமும் இல்ல... கட்டாயம் மக்களுக்கு வேற ஆப்சன் இல்ல...(எப்படி எல்லாம் விதி விளையாடுது)
6 புது வருஷம்...
7 பரீட்சை விடுமுறை
8 மருத்துவரின் விசிறிகள்...(கழுதை தேஞ்சு கட்ட எறும்பா ஆகாம இருந்தா சரி )
9 மருத்துவர் படம் ஓடுறதுக்காக ஊரு ஊரா திரைஅரங்குக்கு போறாராம் ஆதரவு திரட்ட..( யாரும் கண்டிப்பா பிரஸ் மீட் வைக்காதிங்கப்பா... அப்பறம் அது வேட்டைகாரனை விட பயங்கரமா ஓடி இந்த சாதனைய முறியடிச்சுடும்..)
10 அப்பறம் இந்த மாதிரி விமர்சனம் எழுத... (சொந்த செலவுல பொய் சூனியம் வச்சுகிறது..)

சரி நடந்தது நடந்து போச்சு... இனிமேவாவது நடிக்க முயற்சி செய்ங்க மருத்துவரே... பாவம் உங்கள இட்டி சென்னை ல உள்ள ரவுடி எல்லாம் திருந்திட்டாய்ங்கலாம்.. எதுக்குனா இனிமேலும் நீங்க ஊர்ல இருந்து குதிரை புடிச்சு வந்து அவங்கள திருத்தக்கூடாதுன்னு மானசீகமா முடிவெடுத்து இருக்காய்ங்களாம். வேற கதைல நடிக்கனும்னு (அட்லீஸ்ட் முயற்சி பண்ணுங்க..) ஒரு பேராசை தான் அப்படின்னு ரவடி கள் சங்கத்தில இருந்து அறிக்கை விட்டுருக்காய்ங்கன்னு ஒரு கேள்வி...

பாத்து சூதானமா இருந்துகிருங்கப்பூ.....
 
Design by Pocket Distributed by Deluxe Templates