பொதுவாக குட்டி என்னும் சொல்லானது தனியாக உபயோகப்படுத்தும்பொழுது இரண்டு விதமாக பொருள் தரும்.
ஒன்று : சிறிய அல்லது சின்ன என்று பொருள் தரும். இரண்டாவதாக (குறிப்பாக) அழகும் வனப்பும் உள்ள பெண்களை பெண்களுக்கு தெரியாமல் (தெரிஞ்சா செருப்படி கிடைக்கும்) குறிப்பிடவும் பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக பள்ளி கல்லூரிகளுக்கு செல்லும் பெண்களை குறிப்பிட பயன்படுகிறது. மேலும் வயதும் வாலிபமும் உள்ள இளைஞர் கூட்டம் பெண்களை சைட் அடிக்கும் பொது இந்த சொல்லை உபயோகப்படுத்துவார்கள், உதாரணமாக "மச்சி, குட்டி சும்மா கும்முன்னு இருக்குல்ல" என்றும் "குட்டி நச்" என்றும் குறிப்பிடபடுவதுண்டு. ஆனால் பட்டணங்களில் இருக்கும் பெரியோர்கள் இவ்வாறு சொல்வது நாகரிகம் இல்லை என்று கருதியோ இல்லை வேறு சில காரணம் கருதியோ அவ்வாறு பெண்களை வெளிப்படையாக கூறுவதில்லை...ஆனால் கிராமத்தில் இச்சொல்லானது எல்லோராலும் பயன்படுத்தபடுகிறது.... இதை பற்றி இளைஞர் களிடம் கேட்ட பொது... அவர்கள்.. குட்டி என்ற சொல்லானது பெரியோர்கள் மற்றும் பெரியோர்கள் போர்வையில் நடிப்பவர்களால் வேண்டும் என்றே ஒதுக்கபடுவதாகவும் அதானல் வளரும் தலைமுறையினர் இந்த சொல்லை அடுத்த, வருங்கால சந்ததியினருக்கு எடுத்து செல்ல வேண்டியே உபயோகப்படுத்துவதாக கூறுகின்றனர். மற்றபடி பெண்களை ஓட்ட வேண்டும் என்ற எண்ணம் கடுகளவும் கிடையாது என்றும் ஆணித்தரமாக அடித்து கூறுகின்றனர்.
மேலும் குட்டி என்ற சொல்லை மற்ற சொற்களோடு உபயோகப்படுத்தும் பொது பல சமயங்களில் பல பொருளை தருகிறது..
அதாவது உயர்வாகம் சில இழிவாக கூறவும் பயன்படுகிறது... அதோடு நில்லாமல் குட்டி என்ற இந்த சொல்லானது "பால" பருவத்தை குறிக்கவும் பயன்படிகிறது... புலியின் குட்டியை புலிக்குட்டி என்றும் பூனையின் குட்டியை பூனைக்குட்டி என்றும் யானையின் குட்டியை யானைக்குட்டி என்றும் பண்டைய தமிழர்களால் முன்மொழியப்பட்டு இன்றும் அவ்வாறே வழிமொளியப்படுகிறது... என்றாலும் கன்றுகுட்டி என்பது கன்றின் குட்டி என்று பொருள் படாமல் பசுவின் கன்று என்று பொருள் படுகிறது... இது குட்டி என்ற சொல்லின் overloading என்றே கருத வேண்டும்..
இழிவாக ஒருவரை திட்ட வேண்டும் என்றாலும் இந்த குட்டி என்ற சொல் மக்களுக்கு பெரும் உதவி புரிகிறது... குறிப்பாக "குட்டி சுவராத்தாண்ட போவ" என்பதில் குட்டி என்பது சுவருக்கு முன்னால் வருகிறது... பல சமயங்களில் நாம் இந்த வார்த்தையில் வரும் குட்டியை கவனிக்க மறந்து இருப்போம் அதற்க்கு காரணம் குட்டி யானது சுவருக்கு முன்னே வருவதால் சுவர் நம் கண்களில் இருந்து குட்டி யை மறைத்து குட்டிக்கு பெரும் கேடு விளைவிக்கிறது... அதனாலேயே குட்டி யானது சுவருக்கு கேட்ட பெயரை தருகிறது. மேலும் இது "குட்டி சாத்தான்" என்றும் "குட்டி பிசாசு" என்றும் பிறரை திட்ட பயன்படுகிறது...
நாம் இலக்கியத்தை உற்று நோக்கினால் புலவர்களின் பேரில் கூட குட்டி என்பது இருந்திருப்பது உள்ளங்கை நெல்லிக்கனி போல துல்லியமாக தெரிகிறது... எடுத்துக்காட்டாக முத்துக்"குட்டி" புலவர். மேலும் இந்த சொல்லை "பழமொழி" யிலும் கூறி இருக்கிறார்கள்.. இது " கழுதை கெட்டா குட்டி சுவர் ' என்பதிலிருந்து விளங்கும்... பழன்காலத்தொடு நின்று விடாமல் சமகால கவிஞர்கள் இல்லை அது போல கருதப்படுபவர்களாலும் குட்டி என்ற சொல்லை நிராகரிக்க முடியவில்லை என்பதை பல திரைப்படங்களில் இருந்து நாம் கண்டு கொள்ளலாம்.....
இவ்வாறு தனிசிறப்போடு விளங்கும் இந்த குட்டியை ஆங்கில மொழி (அக்கொயர்) தனதாகிகொள்ள பெரும் முயற்சி நடப்பது இந்த வாக்கியத்திலிருந்து உறுதியாகிறது... பொதுவாக அவர்கள் "நல்ல தேநீரை" குட் டி என்று கூறுவார்கள். பின்பு அதையே குட்டி என்றும் உபயோகப்படுத்த வாய்ப்பு உள்ளதால் குட்டியின் தனித்தன்மையை காக்க சட்ட சபையில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்பதே தமிழ் ஆர்வலர்களின் கோரிக்கை..
ஆகவே குட்டியை வாழ வைப்போம்.... வாழ்க குட்டி...